“சியான் 60” படத்தில் இளம் ஒளிப்பதிவாளர் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
விக்ரமின் சியான் 60 படத்திற்கான அப்டேட்டும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் இப்படத்தில் துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இளம் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா இணைந்துள்ளார். இதனை சியான் 60 படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.