சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் அவரது குழந்தைக்கு கார் பரிசாக வழங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் அந்த சீரியலில் நாடக ஜோடிகளாக இணைந்து அதன் பின் ஏற்பட்ட காதலால் நிஜ வாழ்க்கையிலேயே ஜோடி ஆகிவிட்டனர். திருமணம் முடிந்த அவர்களுக்கு தற்போது ஐலா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.
இதை தொடர்ந்து தற்போது சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலிலும், ஆல்யா மானசா ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே தங்களது குழந்தையின் புகைப்படத்தை இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு ஐலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு சர்ப்ரைஸ் வழங்கும் வகையில் கார் ஒன்றை அவரது தந்தையான சஞ்சீவ் தற்போது பரிசளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.