Categories
லைப் ஸ்டைல்

இதுல ரொம்ப ஆபத்து இருக்கு…. எதுக்கு ரிஸ்க்…? இனி கையில தொடாதீங்க…!!!

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. மனித உறுப்புகளில் உள்ள சில உறுப்புகள் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. இந்த வகையில் நம் உறுப்புகளில் பெரிதாக கவலைப்படாமல் இருக்க கூடிய ஒரு உறுப்பு கைகள் தான். ஏனென்றால் எந்த பொருளை எடுக்க வேண்டுமானாலும் மிகவும் தேவையானது கைகள் தான். பொதுவாக கைகளில் பலவிதங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் கூட நம் கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

ஆன்ட்டி பாக்டீரியல் சோப்:

இந்த ஆண்ட்டி பாக்டீரியல் சோப்பை வைத்து கைகளை கழுவும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அரிப்பு மற்றும் சொறி போன்றவை கூட உண்டாக கூடும்.

ரப்பர் கையுறைகள்:

லேடெக்ஸ் என்ற வேதிப்பொருளால் ரப்பர் கையுறைகள் தயாரிக்கப்படுவதால், அதை கையில் அணியும் போது அலர்ஜியை ஏற்படுத்துவதுடன், மோசமான பாதிப்புகளை கைகளுக்கு உண்டாக்கும்.

வெப்ப காற்று:

கைகளில் ஈரம் இருக்கிறது என்பதற்காக வெப்பக்காற்றை அதிகளவில் பயன்படுத்தினால் அது பாதிப்பை உண்டாக்குவதோடு கைகளின் ஈரப்பதத்தை முழுவதுமாக பாதிக்கக்கூடும். எனவே அதுமாதிரியான கருவிகளை தவிர்ப்பது நல்லது.

நைல் பாலிஷ்:

சிலருக்கு நைல் பாலிஷ் கைகளில் வைக்கும் போது ஒத்துக் கொள்ளாது. இப்படி ஒத்துக்கொள்ளாதபோது நைல் பாலிஷ் வைக்கும் பட்சத்தில் நகத்தோடு முழு கைகளையும் பாதிக்கக்கூடும்.

பாடி ஸ்பிரே:

சிலர் பாடி ஸ்பிரேவை கைகளிலும் அடித்து கொள்வார்கள். இது போன்ற செயல்கள் கைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகள் உண்டாக்கும். எனவே கைகளில் அடிக்க கூடாது.

அழகு சாதனங்கள்:

அழகு சாதனங்கள் பிடித்துள்ளது என்பதற்காக கண்ட பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. அப்படி வேதிப்பொருள் நிறைந்த பொருளை கையில் பயன்படுத்தும் போது, கையை மட்டும் பாதிக்காமல் உடலையும் சேர்த்து பாதித்து விடும்.

Categories

Tech |