Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்திலேயே…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோதனையில் சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

திருமணமான 4 மாதத்திலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வாளவாடி பகுதியில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரதிக்கும் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகனான ஸ்ரீதருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் தாசம்பாளையம் பகுதியில் பாரதி தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பாரதி தூங்க  போவதாக கூறி விட்டு அறைக்குள் சென்றுள்ளார். அதன் பின் கதவை தட்டியபோது நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஸ்ரீதர் பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பாரதி கடிதம் எழுதி வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான நான்கு மாதத்திலியே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |