நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கேஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல் விலை உயராமல் சில மாதங்கள் இருந்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல்- டீசல், சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கேஸ் சிலிண்டரின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மருந்து விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மருந்துகளின் உற்பத்தி செலவு 10% முதல் 20% வரை அதிகரித்துள்ளதால் மருந்தின் விலையை 20 சதவீதம் உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. 2020 ஆண்டுக்கான மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் மருந்து விலையை 0.5% உயர்த்திக்கொள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.