மத்திய அரசு அறிவித்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலகிக் கொள்ளும் முடிவை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் வத்தலகுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க கிளை தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். வளர்ச்சி அதிகாரிகள் கோபால், அலெக்ஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
முகவர் சங்கத்தலைவர் துரைராஜ் ஆர்ப்பாட்டத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலக்கி முடிவை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முகவர் சங்கத்தின் செயலாளர் பரமசிவம் நிறைவுரையாற்றியுள்ளார். இதையடுத்து ஊழியர் சங்க செயலாளர் நாகபாண்டி முடிவில் நன்றி உரை கூறினார்.