Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் திடீர் தகராறு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்யாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று போற்றப்படும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது படக்குழுவினருக்கும் அங்கு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் தகராறாக மாறியது. இதை கண்ட விஜய் சேதுபதி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அங்கு கூட்ட நெரிசல் காணப்பட்டதால் போலீசாரும் அங்கு விரைந்து இப்பிரச்சனை குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |