Categories
லைப் ஸ்டைல்

தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க… எந்த நோயுமே வராது…. உடலுக்கு அவ்வளவு நல்லது…!!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இதுவே தீர்வாக அமையும்.

அதன்படி கேரட்டில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் காலை உணவிற்கு முன்பு கேரட் ஜூஸ் குடித்து வந்தால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, ஆர்த்ரிடிஸ், மோசமான செரிமானம், வாயு தொல்லை, மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமான நம்முடைய வேலைச் சுமைகள் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் மன சோர்வை நீக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனை காலை வெறும் வயிற்றில் குடித்தால் சோர்ந்துள்ள இதய தசைகள் வலுவடைந்து, உடல் பருமன் ஏற்படாமல் எப்போதும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். நமது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தை தடுப்பதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிக்கலாம். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்தானது, கல்லீரல், இரைப்பை, குடல், கண் பார்வை மற்றும் இதயம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Categories

Tech |