Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்…. அதிரும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூபாய் 2,93,000 பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பறக்கும் படையும் அலுவலர் முனியாண்டி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக காரில் திருமுக்கூடலிருந்து வந்த நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 2,93,000 ரூபாய் கொண்டு வந்ததுள்ளார். அப்பணத்தினை பறிமுதல் செய்த காவல்துறையினர்கள் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |