இத்தாலியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின் உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா ,பிரான்ஸின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து வ அதிகரித்து வருகிறது . அதனால் தினமும் 35 ,000க்கும் மேற்பட்டோர்க்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.மேலும் அந்நாட்டில் தற்போது வரை கொரோனாவுக்கு 1 லட்சத்திறக்கும் மேல் பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர். அதனால் தற்போது வரை 42 லட்சத்தக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுஉள்ளார்கள் . அதனால் இந்த வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் 1 மாத காலத்துக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் பாரிஸ் மற்றும் 16 நகரங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மற்றும் புத்தக கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் .
இதனையடுத்து மக்கள் யாரும் தேவை இல்லாத காரணங்களுக்காக வெளியே மற்றும் பயணங்கள் செல்லக்கூடாது. மக்கள் நடைப் பயிற்சியை மேற்கொள்வதற்கு உரிய சான்றிதழ்கள் அளித்த பிறகே அனுமதிக்கப்படும் என்றும் தங்களது வீடுகளிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தேசிய அளவிலான இரவு ஊரடங்கின் நேரம் மாலை 6 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு தொடங்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அஸ்ட்ரா ஜெனீகா தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.