விஜய் டிவியில் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அரசியலில் மும்முரம் காட்டி வருவதால் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸின் ஐந்தாவது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகின்றது.
இதனை பார்த்த இணையதளவாசிகள் நடிகர் கமலஹாசன் அரசியலில் அதிக அளவு பணத்தை செலவிட்டு வருவதால் அதனை ஈடு செய்வதற்காக நிச்சயம் அவர் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.