விராலிமலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் சோதனைச் சாவடி அருகே பஸ் நிலையம் உள்ளது. அதில் நேற்று ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இறந்தவரிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். அப்போது அவர் பையில் ஆதார் கார்டு ஒன்று இருந்தது, அதை எடுத்து பார்த்த போது அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள திரன்மாநகரில் வசித்து வந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பின் அவரது உடலை மீட்டு, திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.