ஒரு வீட்டில் பெண் இல்லை என்றால் அந்த வீடு எப்படி இருக்கும் என்றுஒரு பெண் சோதித்துப் பார்த்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நம் எல்லாருடைய வீட்டிலும் வீட்டு வேலைகளை செய்வது தாய்தான் அவர்தான் குடும்பத்தலைவி. அதனால் அவர் தினமும் காலையில் எழுந்ததிலிருந்து சமைப்பது, துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது ,கழிவறைகளை சுத்தம் செய்வது மற்றும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பல வேலைகளை அன்றாடம் செய்து வருகிறார்கள். அதனால் அவர் செய்யும் வீட்டுவேலைகளை அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் அந்தத் தாய் ஒருநாள் வீட்டில் இல்லாமல் இருந்தால் அந்த வீடு தலைகீழாக மாறிவிடும். ஒரு தாய் வீட்டில் இல்லை என்றால் அன்றை நாள் எப்படி இருக்கும் என்பதை சோதித்து பார்க்க ஒரு பெண் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அந்தத் பெண் தன் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தும் செய்து தனக்கு சலித்துப் போனதாக 3நாட்களுக்கு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன் என்று தனது குடும்பத்தினரிடம் கூறி உள்ளார். மேலும் இதனை தனது ட்விட்டர் பதிவில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தன் வீட்டில் எந்த வித வேலையும் செய்யவில்லை . அதன்பிறகு 3 நாட்கள் கழித்து வீட்டை சென்று பார்த்து உள்ளார் . அப்போது அந்த வீடு அலங்கோலமாக காட்சி அளித்தது.அந்த வீடு முற்றிலும் தலைகீழாக மாறி இருந்தது.மேலும் வீடு சுத்தம் செய்யாமல், துணி துவைக்காமல், பாத்திரம் கழுவாமலும், காப்பி போட கூட ஒரு பாத்திரம் இல்லாமலும் ஸ்பூன் இல்லாமல் தன் குழந்தையின் ஸ்பூனில் காபி கலக்கினேன் என்றும் தன் பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வீட்டில் வேலை செய்யாத நிலையில் அவரது கணவர் சில வேலைகளை செய்ததாக கூறியுள்ளார். அதனால் தான் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தன் குடும்பத்தின் மீது உள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக இந்த வேலைகள் அனைத்தையும் சோர்வடையாமல் செய்கிறார்கள் என்று அதில் கூறியுள்ளார்.