செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. பாமக 2 முறையும் தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் வரலட்சுமி. செங்கல்பட்டு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,26,535 ஆகும். பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அரசு அரசின் அறிவிப்பு பல ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாகவே உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தேவை என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. சுகாதார சீர்கேட்டை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் புகாராக உள்ளது. குளவாய் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி சுற்றுலா மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஊறத்தாக்கம் ஊறத்தாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் தன் முன்வைத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டதாக எம்எல்ஏ வரலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார் . செங்கல்பட்டு நகரத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பதும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.