Categories
சினிமா தமிழ் சினிமா

வெவ்வேறு சீரியல்நடிகைகள் ஒன்றாக செல்ஃபி…. இணையத்தில் பரவும் புகைப்படம்…!!

வெவ்வேறு சேனல்களில் நடித்து வரும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கென எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் மாபெரும் வெற்றி அடைந்து வருவதால் அதனை வேறு மொழிகளில் ரீமேக் செய்யவும் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சுஜிதாவும் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷபானாவும் ஒன்றாக செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த அழகிய செல்ஃபி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Categories

Tech |