2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (50). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளை 2018 ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து முத்தையா என்பவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி புளோரா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது குற்றம் நிரூபிக்கப்பட்ட முத்தையாவுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 12,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து முத்தையாவை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்