சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது…
சென்னையில் சமீபகாலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசியின் வாயிலாகவோ வரும் திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு முறை குடிநீரைப் பெற்றால் அடுத்த ஏழு நாட்களுக்கு பின்னரே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் என்று தனது டுவிட்டர் பதிவில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டு உபயோகத்திற்காக 3 ஆயிரம் லிட்டர் குடிநீர் 400 ரூபாயாகவும் வர்த்தக பயன்பாட்டிற்காக பதினாறாயிரம் லிட்டர் குடிநீரை 1,700 ரூபையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.