புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனையின் போது, மேலும் ஐந்து பேருக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 48 ஆக இருக்கிறது . தற்போது வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.