பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பல்வேறு தீவுகளை உள்ளடக்கியது பிலிப்பைன்ஸ். இந்த நாட்டின் லூஜன் தீவின் வடக்கே இத்பயாத் நகரின் வடகிழகில் 12 கி.மீ. தொலைவில் 12 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை சரியாக 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக பதிவானதாக புவியில் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதனால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த வீடுகள் இடிந்து விழுந்தன.
அதிகாலை வேளையில் மக்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடினர். மேலும் பலர் வீதிகள் மற்றும் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இதனால் சாலைகள் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது. இந்த நிலநடுக்க பாதிப்பால் 8 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை 7.38 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.