Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி என்ன அவசரம்… விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  முக்கானிப்பட்டி விலக்கு ரோட்டில் தங்கராஜ் என்பவர் சைக்கிளில் சென்று கொன்டிருந்தார். மேலும்  கலிங்கநாராயணன் பட்டியை சேர்ந்த  நாகராஜ் மற்றும் குமார் என்ற  இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த கார்  எதிர் பாராதவிதமாக திடீரென மூன்று பேர் மீதும் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜ் மற்றும் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தங்கராஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் அலாவுதீன்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |