பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை துளிகூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் சுய மரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் தனியாக வாழ்ந்து வரும் கண்ணாமா கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
இதனைப் போலவே கண்ணம்மாவிற்கு மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கும் சௌந்தர்ய லக்ஷ்மியும் அவரது திறமையான நடிப்பை காட்டி வருகிறார். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் சௌந்தர்ய லட்சுமியாக நடித்து வரும் ரூபாஸ்ரீ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளிகூட மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிகொடுத்துவருகின்றனர்.