Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் சிறப்பு அம்சம் …10 மாதங்களுக்கு மேல் பாதுகாப்பு அளிக்கும் …உறுதியளித்த எய்ம்ஸ் இயக்குனர்…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா  தடுப்பூசியின் சிறப்பு அம்சங்களை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரான ரந்தீப் குலேரியா கொரோனா  தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி தெரிவித்தார். இதைப்பற்றி அவர் கூறுகையில், இந்தியாவில் செலுத்தப்படும் இந்தக் கொரோனா  தடுப்பூசிகள் குறைந்தது 8 மாதம் முதல் 10 மாதங்கள் வரையிலும்  மற்றும் அதற்கு அதிகமாகவும்,  கொரோனா  தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் கொரோனா  தொற்றானது மிக வேகமாக பரவி வருவதற்கு ,பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட ,பொதுமக்களின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறினார். இதனால் பொதுமக்கள் அவசியமின்றி பொது இடங்கள் மற்றும் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்வதை , சிறிது காலத்திற்கு தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணையாக உள்ளவர்களிடையே  அதிகளவு  உயிரிழப்பு ஏற்படுவதால் , இந்தப் பிரிவினர் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

Categories

Tech |