நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செய்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைக்காக நாடு முழுவதும் மீண்டும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்க 287 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுசேரியை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. சாலை போக்குவரத்து துறை மூலம் ரூபாய் 20,000 கோடிக்கு திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.