ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டம் சர்பஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் அதிகாரி விக்ரம் சிங் பாலியல் வன்கொடுமை மற்றும் கும்பல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றவாளி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
9 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் தினமும் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வருகிறது. இது முதல் வழக்கு என்று அழைக்க முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.