Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. அடுத்தடுத்த வாகனங்களால் தலை நசுங்கி உயிரிழந்த வாலிபர்… மதுரையில் நடந்த கோர விபத்து….

மதுரையில் வாகனம் தலையில் ஏறி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம தெற்கு வாசல் பகுதியில் தாஜுதீன் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மதுரையிலிருக்கும் எல்லீஸ் ரயிவே மேம்பாலத்தில் டி.வி.எஸ் சில் பயணத்திகிறார். அப்போது அவ்வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் தாஜூதீனின் டி.வி.எஸ் ஐ கவனிக்காமல் இடித்து தள்ளியுள்ளது. இதனால் அவர் கீழே விழுந்ததையடுத்து சற்றும் எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த வாகனம் கீழே விழுந்த தாஜூதீனின் தலையில் ஏறி இறங்கியுள்ளது.

இதனால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தினை குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், அவரின் உடலை கைப்பற்றி பொதுத்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |