Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள்…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரம்..!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில் தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்கள் 3.09 கோடி, பெண்கள் 3.19 கோடி, திருநங்கைகள் 7,192 பேர் உள்ளனர். தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்பு மனுக்களில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 2,743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். போன்ற புள்ளி விவரங்களை அவர் தெரிவித்தார்.

Categories

Tech |