எகிப்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 2.30 மீட்டர் உயரம் துள்ளிக்குதித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கெய்ரோவில் நடந்த சாதனை நிகழ்வில் எகிப்தை சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவர் ஓமர் சையது ஷஅபான் நீருக்கு அடியிலிருந்து 2.30 மீட்டர் துள்ளி குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆண்டுகளுக்கு முன் இத்தாலி வீரர் சீசரே டுமாரோலா மற்றும் ஸ்டெபானோ ஆகியோர் 2 மீட்டர் உயரம் துள்ளி குதித்து சாதனை படைத்த நிலையில் இந்த சாதனையை எகிப்தை சேர்ந்த வீரர் முறியடித்துள்ளார்.