தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் கல்லூரிகளை மூட போவதாக சில தனியார் கல்லூரிகள் அறிவித்துள்ளன. தற்போது கல்லூரிகளில் செய்முறை தேர்வுகளுக்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர். அரசு கல்லூரிகள் மூடல் குறித்து இன்னும் முடிவு எடுக்காத நிலையில் தனியார் கல்லூரிகள் விடுமுறை அளிக்க முன்வந்துள்ளன.
இந்நிலையில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில், கும்பகோணம் அருகே கோவில் சேரியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கொரோனா பரவல் காரணமாகவும் கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.