Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர காவல்துறைக்கு வந்த தகவல்… இதை யாரு பண்ணியிருப்பா..? போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகப்பட்டினம் புதுப்பள்ளி கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சாவை கடலோர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் கீழ்வேளூர் கடலோர காவல் குழும காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மூன்று மூட்டைகள் சில அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த மூட்டைகளை பத்திரமாக வெளியே எடுத்து பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 120 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நாகை கடலோர காவல் நிலையத்திற்கு அந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அந்த கஞ்சா பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் முதல் கட்டத்தில் கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளை கடத்துவதற்காக அங்கே புதைத்து வைத்தவர்கள் யார் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |