உடும்புகல்குட்டை பகுதியில் விவசாயி ஒருவர் மலையடிவாரத்தில் பிணமாக அழுகி கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள உடும்புகல்குட்டை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி, இவருக்கு திருமணமாகி பெருமாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீரமுத்துவிற்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதால், கையில் பணம் இல்லாத போது வீட்டில் உள்ள ஆடுகளை விற்று மது அருந்தி வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 18ம் தேதி குடிப்பதற்காக இரண்டு ஆடுகளை வீட்டிலிருந்து எடுத்து சென்றவர் இன்னும் வீட்டீற்கு வர வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி அவரை தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று மலையடிவாரத்தில் அழுகிய நிலையில் உடல் கிடப்பதாக மனைவி பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.