Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்” குறித்து கவலையிலிருக்கும் பிரிட்டன் மகாராணி… ஏன் தெரியுமா…?

பிரிட்டன் மகாராணி தன் மகனை நினைத்து கவலையிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வரலாற்று ஆசிரியர் கிளைவ் இர்விங் பிரிட்டன் மகாராணி பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார். அதில், ” பிரிட்டன் மகாராணிக்கு இளவரசர் சார்லசை விட இளவரசர் ஆண்ட்ருவை தான் பிடிக்கும். அதனால்தான் ஆண்ட்ரூ எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொண்டாலும் மகாராணி அவரை மனப்பூர்வமாக மன்னித்து விடுகிறார்” என்று கூறியுள்ளார். இது குறித்து மற்றொரு பிரபலம் கூறியதாவது,” இளவரசர் ஆண்ட்ரூக்கு அப்படியே எதிரானவர் தான் இளவரசர் சார்லஸ்.

ஆனால், மிகவும் பக்குவத்துடன் எல்லாருக்கும் பிடித்த மாதிரி இளவரசர் ஆண்ட்ருவால்  நடந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் தனது தந்தை போல திமிருடனும்  , முரட்டுத்தனத்துடனும் அவரால் மட்டுமே  நடந்து கொள்ள முடியும். ஆனால் சார்லஸ் அப்படி கிடையாது. அவரைப்பற்றி மகாராணிக்கு நன்கு தெரியும். மேலும் தன் மகன் சார்லஸ் தொடர்பாக மகாராணி மிகப்பெரிய கவலை இருக்கிறார். இருப்பினும் மகாராணிக்கு  பிறகு முடிசூடும் வரிசையில் இருக்கும் சார்லசும் ஆண்ட்ருவும் தகுந்த நேரத்தில் அதற்கு ஏற்றது போல நடப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அந்த பிரபலம் கூறியுள்ளார்.

Categories

Tech |