Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல்… இரு கட்சி குழுவினருக்கு இடையே மோதல்… தலைமறைவான வாலிபர்கள்..!!

உப்போடை பகுதியில் தி.மு.க வை தாக்கி அ.தி.மு.க செயலாளர் தகவல் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த தி.மு.க குழுவினர் தகராறு ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள உப்போடை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியில் மாணவரணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தி.மு.கவை குறித்து  தனது வாட்ஸப்பில் தகவல்களை பரப்பியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த தி.மு.க கூட்டணி குழுவினர் சதீஷ்குமார், கௌதமன், சுகவனேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஒன்று  சேர்ந்து பிரபாகரனை  தாக்கியுள்ளார்கள்.

இதில் காயமடைந்த பிரபாகரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும்  சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர். சுகவனேஷ்வரன் மற்றும்  கௌதமன் தலைமறைவனதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Categories

Tech |