வடுகம்பளையத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகம்பாளையம் பகுதியில் திம்மாசி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைப்பதற்க்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த டிவி ,மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பீரோ, கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மேலும் இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.