Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: அசுரன் படத்திற்கு தேசிய விருது… குதூகலத்தில் படக்குழு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் மையத்தில் இயக்குனர் ஷாவி என்.கரூன் தேசிய விருதுகளை அறிவித்து வருகிறார். திரைத்துறை க்கான சிறந்த மாநில விருது சிக்கிம்முக்கு வழங்கப்பட்டது. சிறந்த சினிமா விமர்ச ருக்கான தேசிய விருதை கொல்கத்தாவை சேர்ந்த சோஷினி சட்டோபத்யாயா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் நடித்த தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்திற்காக தனுஷ் ஏற்கனவே ஒரு முறை தேசிய விருது வென்று இருந்தார். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக அசுரன் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால் அசுரன் படக்குழு மகிழ்ச்சி அடைந் துள்ளது.

Categories

Tech |