Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்…. அதிகரிக்கும் கொரோனா… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 100 பேரை பரிசோதனை செய்தால் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 100 பேரை பரிசோதனை செய்தால் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தி நகர், மயிலாப்பூர் மற்றும் மடிப்பாக்கத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. இதனால் பொது இடங்களில் கொரோனாவுக்கான ரேண்டம் பரிசோதனை அதிகரித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |