Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதை தான் கடத்துனாங்களா…. அதிரடி சோதனையில் சிக்கியவைகள்…. அதிகாரிகள் நடவடிக்கை..!!

நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க வேட்டி மற்றும் துண்டுகளை கடத்தி சென்ற காரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காகவே நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தத்தாத்திரிபுரம் பகுதியில் பறக்கும் படை குழுவினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது  அவ்வழியாக  வந்த காரில் தி.மு.க கரை போட்ட வேஷ்டிகள் மற்றும் 8 துண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து காரை பறிமுதல் செய்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |