பிரிட்டனில் போதை கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமைப்படுத்துவதாக முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கூறியுள்ளார்.
பிரிட்டனில் முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் Maththew Norford அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், ” பெற்றோர்களுக்கு தெரியாமல் பல குழந்தைகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு சன்மானமாக குழந்தைகளுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் Fortnite என்ற கேமில் V-Bucks என்றழைக்கப்படும் விளையாட்டு நாணயங்களை வைத்து ஆயுதங்கள் மற்றும் அனிமேஷன்களை வாங்கி கொடுக்கின்றனர்.
மேலும் குழந்தைகளை இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாக்குவதற்காக இரவு நேரங்களில் அந்த மர்ம கும்பல் குழந்தைகளுடன் நீண்டநேரம் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதன் மூலம் குழந்தைகள் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
Fortnite என்பது சொந்த பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டு அல்ல. அது விளையாட்டு நாணயத்தின் மூலம் தான் விளையாடப்படுகிறது. இருப்பினும் குழந்தைகள் இதற்கு அடிமையாகி போதை கும்பல் கூறும் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.