தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், மோடிக்கு தமிழகத்தின் மீது கடும் கோபம் உள்ளது. மேலும் எடப்பாடி சசிகலா வாலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், ஊர்ந்து வருவதற்கு நான் என்ன பல்லியா? பாம்பா? என்கிறார். இது சசிகலாவுக்கு தான் வெளிச்சம் என்று தெரிவித்துள்ளார்.