மகரம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டிய நாளாக இருக்கிறது.
ஏற்கனவே திட்டமிட்ட செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.
இன்று முற்பகலை விட பிற்பகலில் தான் அதிக நன்மை ஏற்படும். மதியத்திற்கு மேல் தான் உங்களுக்கு வருமானம் கிட்டும். உங்களுக்கு அனுகூலம் கிட்டும். இன்று ஏஜென்சி காண்ட்ராக்ட் துறையில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். ஓரளவு சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். கொடுக்கல் மற்றும் வாங்கலில் அதிகமான தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது சிறந்தது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது தவிர்ப்பது சிறந்தது.
யாரைப்பற்றியும் விமர்சனங்கள் தேவை இல்லை. இன்று தாய்வழி உறவினர்களின் மூலம் உங்களுக்கு தனலாபம் கிடைக்கும். மாமன் மைத்துனர் வழியில் மூலம் கூட உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்து முடிப்பீர்கள். மனதில் உள்ள கவலைகளும் படிப்படியாக நீங்கும். மனம் இன்று உங்களுக்கு தைரியமாகவே காணப்படும். இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் இன்று உங்களுக்கும் முன்னேற்றம் ஏற்படும்.
வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். வேலைவாய்ப்புகள் இறந்தவர்களுகு கூட நல்ல வேலை வாய்ப்புக்கள் கிட்டும். இன்று நீங்கள் செய்யக்கூடிய முயற்சியில் வெற்றி நிச்சயம்.
இன்று உங்களுக்கு நேர்மையான எண்ணங்கள் கூட பிரதிபலிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எண்ணெய் சார்ந்த மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. காதலில் உள்ளவர்கள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
காதல் கை கூறினாலும் சில மனக்கசப்புகள் ஏற்படும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
இன்று நீங்கள் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.