Categories
உலக செய்திகள்

இந்தியாவின் தடுப்பூசியை செலுத்திய …இலங்கை மக்களில் 3 பேர் மட்டுமே உயிரிழப்பு … இலங்கை அரசு விளக்கம் …!!!

கொரோனா  தடுப்பூசி செலுத்துவதால் ,ரத்தம்  உறையும் பாதிப்பு ஏற்படுவதாக  எழுந்த புகாரினால் , ஐரோப்பிய நாடுகளில்  தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா  தடுப்பூசிகள், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில்ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்திலிருந்து சுமார் 5 லச்சம்  கொரோனா  தடுப்பூசிகளை  இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. இதனால் கடந்த மாத தொடக்கத்திலிருந்து ,இலங்கையில்  தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது. இந்த தடுப்பூசி டோஸ்களுக்கு, இந்தியாவில் லட்சக்கணக்கில் இலங்கை அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசி போடுவதால், ரத்தம் உறைவதாக எழுந்த புகாரின் பேரில் தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக  ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்தன .

ஆனால் உலக சுகாதார நிறுவனம் ,தடுப்பூசி செலுத்துவதால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது என்று அறிவித்தது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் செயல்பட்டன. இவ்வாறு இலங்கையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் 3 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது. இறந்த அந்த 3 பேரும் மாரடைப்பு ,இருதய நோய் போன்ற பிரச்சினைகளால் உயிரிழப்பு  நேர்ந்தது என்றும், தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்  உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், சுகாதாரத்துறை மந்திரியான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இலங்கையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

Categories

Tech |