கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாகிஸ்தானில் 12 நாடுகளின் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரசினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கீழ்கண்ட 12 நாடுகளில் உள்ள பயணிகள் பாகிஸ்தானுக்கு வருவதற்கு (விமான சேவை) அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
- பிரேசில்
- கொலம்பியா
- தான்சானியா
- பெரு
- கொமொரோஸ்
- கானா
- தென் ஆப்பிரிக்கா
- மொசாம்பிக்
- கென்யா
- ருவாண்டா
- சாம்பியா
- போட்ஸ்ட்வானா
இந்த தடையானது மார்ச் 23ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 5ம் தேதி வரை கண்டிப்பாக அமலில் இருக்கும் என்று பாகிஸ்தானிய அரசு கூறியுள்ளது. பாகிஸ்தானில் மட்டும் இதுவரை 6.15 லட்சம் பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.