திடீரென வெளிவந்த வலிமை அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராஃபி என பல திறமைகளையும் கொண்டவர். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்டு வந்த அஜித் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்றார்.
இந்நிலையில் அஜித்தின் வலிமை பட அப்டேட்டை வெளியிடக் கோரி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் படக்குழு இதுவரை வலிமை படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. தற்போது இப்படம் குறித்த ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்தியாவிலேயே மிகச் சிறந்த போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான் டிசைன் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. வலிமை படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இத்தகவல் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.