மனைவிக்கு தீ வைத்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒருவர் தனது மனைவிக்கு தீ வைத்து பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவலம் பகுதியை சேர்ந்த மாது குட்டி மற்றும் அவரின் மனைவி சரமா என்பது தெரியவந்துள்ளது. இதில் தாயை காப்பாற்ற முயன்ற சம்பவத்தில் 35 வயது மகளும் காயமடைந்தார்.
அவர் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் குடும்ப சண்டையால் இப்படி ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.