இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க நேரடி வகுப்புகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலையில் பயிலும் இறுதி பருவ மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டாம். நாளை முதல் 6 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். செயல்முறை தேர்வுகளை மார்ச்-31 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.