திருச்சியைச் சேர்ந்த தனலக்ஷ்மி என்ற பெண் தடகள 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ஆம் தேதி ஆரம்பித்து 19 ஆம் தேதி வரை நடைபெற்ற அடரேஷன் கோப்பை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தன லக்ஷ்மி என்ற பெண் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச வீராங்கனைகள் ஆன டுடீஸ் அண்ட் ஹிமாதாஸ் ஆகியவர்களை சாதனையை முறியடித்து தூரத்தை 11.35 வினாடிகளில் கடந்து வெற்றியை தனதாக்கி உள்ளார். இதேபோன்று வெள்ளி பதக்கத்தையும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்றார்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை கடந்து ரேகை தாண்டியதும் தனலட்சுமி கீழே அமர்ந்து தனது ஷூவை கழட்டி முத்தமிட்டுள்ளார். இதைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டபோது “என் வெற்றிக்கு காரணமான கடவுளையும் என் அப்பாவையும் நினைத்துப் பார்ப்பதாக” கூறி அனைவரும் முன்பும் கண்கலங்கினார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் விமானம் நிலையம் அருகே உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் மற்றும் உஷா ஆகியோர்களின் மூன்றாவது மகள் ஆவார் .
தந்தை சேகர் தனலட்சுமியின் 15 வயதிலேயே எதிர்பாராதவிதமாக காலமானார் பிறகு தாய் உஷா மூவரையும் மிகவும் கஷ்டப்பட்டு கறவை மாடு வளர்ப்பது தோட்ட வேலைக்குச் செல்வது மற்றும் 100 நாள் வேலை என பல வேலைகளை செய்து மூவரையும் வளர்த்துள்ளார். மேலும் தனலட்சுமியின் இந்தத் திறமையை கண்டு அவர்களின் பயிற்சிக்கு பல இடங்களில் கடன் வாங்கியும் நகைகளை அடமானம் வைத்தும் போட்டிக்கு அனுப்பியதாகவும் அந்தக் கடன்களை கூட இதுவரை இன்னும் கட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
தனலட்சுமிக்கு பயிற்சி அளிக்கும் ஆறுமுகம் மற்றும் சிலர் உதவி வருவதாகவும் தற்போதும் வருமான துறை மற்றும் ரயில்வே வேலைக்கு முயற்சி செய்து வருவதாகவும் ஒரு அரசு வேலை கிடைத்துவிட்டால் தனலக்ஷ்மி மேலும் நிறைய சாதிப்பாள் என்றும் சர்வதேச அளவில் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து தருவாள் என்றும் தாயார் உஷா பெருமையாக கூறினார். இதனைத் தொடர்ந்து 6 வயதில் ஓட்டப்பந்தயத்தில் தனது திறமையை காட்ட ஆரம்பித்த தனலட்சுமி பள்ளி கல்லூரிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் வாங்கி இருப்பதாகவும் தற்போது தங்க பதக்கத்தையும் வென்று சர்வதேச அளவில் பங்கேற்பதற்காக தகுதி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 23 ஆண்டுகளுக்கு முன்னால் தடகள வீராங்கனை பீட்டிஉஷாவின் 1998 ஆம் ஆண்டு பெடரேஷன் கோப்பை 23.3 விநாடி சாதனையை தற்போது தனலக்ஷ்மி முன்னதாக நடைபெற்ற 200 மீட்டர் தகுதிச்சுற்றில் 23.26 வினாடிகளில் கடந்து முறியடிப்பது சாதனையை ஏற்படுத்தியுள்ளது.இதே போன்று ஆண்கள் பிரிவில் தஞ்சாவூர் ரயில்வே ஊழியரான தடகள வீரர் இலக்கியதாசன் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் மூவருக்கும் ரயில்வே ஊழியரான மணிகண்ட ஆறுமுகம் என்பவர் தான் பல்வேறு சிரமங்கள் தடைகளைத் தாண்டி நல்ல முறையில் பயிற்சி அளித்து இந்தியாவிற்கு சாதனையாளர்களை உருவாக்கி கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆகையால் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
.