Categories
லைப் ஸ்டைல்

அடடே… இதுல இவ்வளவு நன்மையா?… படிச்சா தினமும் தவறாம சாப்பிடுவீங்க…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் சிவப்பு அரிசியின் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இதுவே தீர்வாக அமையும்.

அதன்படி சிவப்பு அரிசியில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது குடல் புற்று நோய்களை தடுக்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் பாதிப்பை குறைக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட ஆற்றலை அளிக்கிறது. நார்ச்சத்து அதிகமிருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும். ரத்த அழுத்தத்தை பராமரிக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். புரத சத்து அளிக்கிறது. பால் சுரப்பை அதிகரிக்கும். இதய நோயில் இருந்து காக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே இதனை உணவில் சேர்த்து கொள்வது பல நோய்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

Categories

Tech |