Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தெரியாத நம்பரிலிருந்து போன் செய்தால்…. கடும் எச்சரிக்கை…!!!!

தெரியாத போன் நம்பர் மூலம் ஒருவருக்கு போன் செய்து பிரசாரம் செய்யக்கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து விதிமுறைகளையும் அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மக்களுக்கு சில விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தெரியாத போன் நம்பர் மூலம் ஒருவருக்கு போன் செய்து, குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரம் செய்யக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தெரியாத போன் நம்பரிலிருந்து போன் செய்து பிரசாரம் செய்வதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |