விவசாயிகளுக்கான கிசான் நிதி உதவி எட்டாவது தவணை ஹோலி பண்ணிக்கையை முன்னிட்டு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 8வது தவணையை இந்த மாதம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிஷான் நிதி செக் பண்றது எப்படி?
pmkisan.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் “Farmers Corner” பிரிவில் “Beneficiary Status” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், செல்போன் எண் போன்றவற்றை பதிவிட்டு உங்களுக்கு கிசான் நிதி வருமா என்பதை அறிந்து கொள்ளலாம்.