Categories
உலக செய்திகள்

விமானத்தில் உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர்…. உயிர் பிரியும் முன் காட்சியாளர்களிடம் சொன்ன வார்த்தை…. சோகத்தில் காங்கோ மக்கள்…!!

காங்கோ நாட்டின் எதிர்க்கட்சி வேட்பாளர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவான காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் கை பிரைஸ் பர்பைட் கோலஸ் (61 வயது). இவர் 1979 மற்றும் 2016 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுள்ளர். இதனிடையே இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் தனக்கு மலேரியாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மருத்துவமனையில் சேர்ந்த இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அப்பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றின்  தாக்கம் தீவிரமாக இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கை பிரைஸை அவசர சிகிச்சைக்காக மருத்துவ விமானத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால் அவர் பிரான்ஸிற்கு சென்று கொண்டிருக்கும் வழியிலே விமானத்தில் உயிரிழந்துள்ளார். இதனிடையே கோலஸ் உயிரிழப்பதற்கு முன்பு தனது மோசமான நிலை குறித்து காட்சியாளர்களிடம் தெரிவித்த அவர் நடைபெறும் தேர்தல் வாக்குபதிவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |