Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? மறுபடியும் முதல்ல இருந்தா…. சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு….!!

மதுரையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் அதிகரிக்கத் தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் மெதுமெதுவாக மார்ச் மாதத்தில் தொற்று பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் கடந்த ஆண்டில் குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் தான் தொற்று அதிகமானோரை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மாநகரம் அதே சூழ்நிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 151 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக செல்வதோடு மட்டுமல்லாமல் முக கவசம் அணியாமலும் இருக்கிறார்கள். இவ்வாறு பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றாவிடில் வரும் காலங்களில் தொற்று அதிகரிப்பதில் சந்தேகமில்லை என்றுள்ளார்கள். மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அரசாங்கம் விடுமுறை அளித்துள்ளது. இருப்பினும் தொற்று குறையவில்லை என்றால் ஊரடங்கு போடவும் அரசு தயார் நிலையில் உள்ளதாக  கூறியுள்ளனர்.

Categories

Tech |